ரஷ்ய தூதுக்குழுவினர் செயலாளருடன் சந்திப்பு

பெப்ரவரி 27, 2019

ரஷ்ய தூதுவர், அதிமேதகு திரு. யூரி மட்டேறி அவர்களின் தலைமையிலான தூதுக்குழுவினர் பாதுகாப்பு செயலாளர் திரு. ஹேமசிறி பெர்னாண்டோ அவர்களை இன்று (பெப்ரவரி, 27) சந்தித்தனர்.

பாதுகாப்பு அமைச்சில் இடம்பெற்ற இச்சந்திப்பில் ரஷ்ய தூதுக்குழுவினர் மற்றும் பாதுகாப்பு செயலாளர் ஆகியோருக்கிடையே சிநேகபூர்வ கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது. இந்நிகழ்வில், மேலதிக செயலாளர் ( பாதுகாப்பு ) திரு. அனுராதா விஜேகோன் மற்றும் இராணுவ இணைப்பு அதிகாரி மேஜர் ஜெனரல் டீ ஏ ஆர் ரணவக்க ஆகியோரும் கலந்துகொண்டனர்.