ருவன்வெல்ல பகுதியில் ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்களை பொலிஸ் விஷேட அதிரடிப்படையினர் கைப்பற்றியுள்ளனர்

ஜூலை 26, 2020

பொலிஸ் விஷேட அதிரடிப்படையினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசியா தகவலுக்கு அமைய ருவன்வெல்ல, இம்புலான பகுதியில் மேற்கொள்ளப்பட்ட விஷேட தேடுதல் நடவடிக்கைகளின்போது ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்களுடன் சந்தேகநபர் ஒருவர் நேற்று (ஜூலை 25) கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இதன்போது 11 குறுந்தூர துப்பாக்கிகள்,  13 வெடிபொருட்கள்,  ஏழு வெடிக்கும் தோட்டாக்கள், ஒரு கிலோ வெடிமருந்து,  28  வெற்றுத்தோட்டாக்கள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளது.

ருவன்வெல்ல, இம்புலான பகுதியின் ரத்தகல பிரதேசத்தில் வசிக்கும் 52 வயதுடைய குறித்த சந்தேக நபர் இன்று (ஜூலை 26) அவிசாவளை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார்.

குறித்த சுற்றிவளைப்பினை இலங்கை ஜெயவர்த்தனபுர முகாம் பொலிஸ் விஷேட அதிரடிப்படையினர் முன்னெடுத்துள்ளனர்.

மேலதிகவிசாரனைகள் ருவன்வெல்ல பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.

உடவலவ முகாம் விஷேட அதிரடிப்படையினரால் தனமல்வில, பலஹருவ பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போது, உள்நாட்டில்  தயாரிக்கப்பட்ட இரண்டு துப்பாக்கிகளுடன் இரு சந்தேக நபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

ஹம்பேகாவுவ, எதிலி வெவ பிரதேசத்தில் வசிக்கும் 34 வயதுடைய குறித்த சந்தேக நபர்கள் வெள்ளவாய நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் நேற்று (ஜூலை 25) பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பான மேலதிகவிசாரனைகள் பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.