வருடாந்த பிரியாவிடை மற்றும் புலமைப்பரிசில் வழங்கும் வைபவம்
ஜூலை 28, 2020இடமாற்றம் பெற்றுச்செல்லும் மற்றும் பணியில் இருந்து ஓய்வு பெற்றுச் செல்லும் பாதுகாப்பு அமைச்சில் சேவையாற்றிய உத்தியோகத்தர்கள் மற்றும் அவர்களது பிள்ளைகளுக்கு பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரத்ன இன்று (28) இடம்பெற்ற நிகழ்வில் பரிசில்களை வழங்கி வைத்தார்.
பாதுகாப்பு அமைச்சில் இடம்பெற்ற குறித்த வைபவத்தின் போது தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை, க.பொ.த. சாதாரண தர பரீட்சை ஆகியவற்றில் சிறந்த பெறுபேற்றை பெற்றுக்கொண்ட அமைச்சில் சேவையாற்றும் பணியாளர்களின் பிள்ளைகளுக்கு புலமைப் பரிசில்களை வழங்கினார்.
பாதுகாப்பு அமைச்சில் சேவையாற்றி இடமாற்றம் பெற்றுச் சென்ற உத்தியோகத்தர்கள் சேவைக்காலத்தில் பாதுகாப்பு அமைச்சிற்கு உயரிய சேவைகளை வழங்கியமைக்காக பாதுகாப்பு செயலாளர் தனது நன்றியை தெரிவித்துக் கொண்டார்.
இந்த அமைச்சில் பணியாற்றும் உத்தியோகத்தர்களின் கூட்டு முயற்சிகளை பாராட்டிய பாதுகாப்பு செயலாளர், இடமாற்றம் பெற்றுள்ள மற்றும் ஒய்வு பெற்றுள்ள உத்தியோகத்தர்கள் மற்றும் அவர்களின் பிள்ளைகளின் எதிர்காலம் வளமானதாக அமைய பாதுகாப்பு செயலாளர் தனது வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் வறையறுக்கப்பட் ஏஐஏ காப்புறுதி லங்கா நிறுவனத்தின் பிராந்திய முகாமையாளர் டீஎம்சீபி துனுசிங்ஹ, இலங்கை வங்கியின் பிரதம பாதுகாப்பு அதிகாரி பிரிகேடியர் (ஓய்வு) எல்டப்எச் கமகே, தேசிய சேமிப்பு வங்கியின் பிரதி பொது முகாமையாளர் எல்.கோமிஸ், வறையறுக்கப்பட் மெட்ரோபொலிட்டன் தனியார் நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் ஐ மஹரூப், பாதுகாப்பு அமைச்சின் அதிகாரிகள், முன்னாள் அதிகாரிகள் மற்றும் மாணவர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.