இலங்கை கடற்படையினரால் நிர்மாணிக்கப்பட்ட நீர் சுத்திகரிப்பு நிலையம் மக்கள் பாவனைக்கு கையளிப்பு
ஆகஸ்ட் 08, 2020இலங்கை கடற்படையினரால் முன்னெடுக்கப்பட்டு வரும் சமூக நலன்புரி திட்டத்தின் ஒரு பகுதியாக பனாம பிரதேசத்தில் உள்ள புராண போதிருக்காராம விஹாரையில் நீர் சுத்திகரிப்பு நிலையம் ஒன்று நிறுவப்பட்டுள்ளது.
சுகாதார அமைச்சின் நிதி உதவியுடன் இலங்கை கடற்படையினரால் நிறுவப்பட்ட இந்த குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்களின் சுத்தமான குடிநீர் தேவை பூர்த்தி செய்யும் வகையில் தென் கிழக்கு கடற்படை கட்டளைத்தளபதியினால் வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டது.
மகா சங்கத்தினரின் அனுசாசத்தின் பின்னர் இந்த குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் திருகோணமலை தென் கிழக்கு பிராந்திய கடற்படை பொறுப்பதிகாரி ரியர் அட்மிரல் செனரத் விஜேசூரியவினால் வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டு பொதுமக்கள் பாவனைக்காக கையளிக்கப்பட்டது.
சிறுநீரகம் சார்ந்த நோய் அபாயத்தை எதிர்கொண்டுள்ள மக்களுக்கு சுத்தமான குடிநீரை வழங்குவதுடன் பானம மகா வித்தியாலய மாணவர்கள் மற்றும் புனித பௌத்த விகாரைக்கு வருகை தரும் பக்தர்களுக்கும் சுத்தமான குடிநீரை அளிக்கவுள்ளது.
இந்த நிகழ்வில் போதி ருக்காராம விகாரையின் பிரதம விகாராதிபதி, கடற்படை அதிகாரிகள், பாணம மகா வித்தியாலய மாணவர்கள், பொதுமக்கள், மற்றும் பக்தர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.