பாதுகாப்பு அமைச்சின் மேற்பார்வையின் கீழ் முப்பத்தைந்து அரச நிறுவனங்கள்
ஆகஸ்ட் 11, 2020முப்பத்தைந்து அரச நிறுவனங்கள் பாதுகாப்பு அமைச்சு மற்றும் உள்ளகப் பாதுகாப்பு, உள்நாட்டலுவல்கள் மற்றும் அனர்த்த முகாமைத்துவ இராஜாங்க அமைச்சின் மேற்பார்வையின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளன. இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் இவ்வாரம் வெளியிடப்பட்டுள்ளது.
இதற்கமைய பாதுகாப்பு அமைச்சின் மேற்பார்வையின் கீழ் பின்வரும் அரச நிறுவனங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன.
1. பாதுகாப்புப் பதவிநிலை தலைவரின் அலுவலகம்
2. இலங்கை இராணுவம்
3. இலங்கை கடற்படை
4. இலங்கை விமானப்படை
5. ரக்னா ஆரக்சன லங்கா லிமிடெட்
6. இரசாயன ஆயுதங்கள் சமவாயத்தைச் செயற்படுத்தும் தேசிய அதிகாரசபை
7. சிவில் பாதுகாப்புத் திணைக்களம்
8. அரச புலனாய்வு சேவை
9. இலங்கை கடலோரப் பாதுகாப்புத் திணைக்களம்
10. தேசிய அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டுச் சபை
11. சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்புப் பல்கலைக்கழகம்
12. பாதுகாப்புச் சேவைகள் கட்டளை, பதவிநிலை அதிகாரிகள் கல்லூரி
13. பாதுகாப்புச் சேவைகள் பாடசாலை
14. தேசிய பயிலிளவல் சிறப்பணி
15. தேசிய பாதுகாப்பு நிதியம்
16. பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி நிலையம்
17. இலங்கை தேசிய பாதுகாப்பு கற்கைகள் நிறுவனம்
18. இலங்கை தேசியப் பாதுகாப்புக் கல்லூரி
19. ரணவிரு சேவை அதிகாரசபை
20. அபி வெனுவென் அபி நிதியம்
21. பலசெயற்பாட்டு அபிவிருத்தி செயலணி திணைக்களம்
22. தொல்பொருளியல் திணைக்களம்
23. மிலோதா நிறுவனம் (ACADEMY OF FINANCIAL STUDIES )
மேலும், உள்ளகப் பாதுகாப்பு, உள்நாட்டலுவல்கள் மற்றும் அனர்த்த முகாமைத்துவ இராஜாங்க அமைச்சின் பார்வையின் கீழ் பின்வரும் நிறுவனங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன.
1. சகல மாவட்டச் செயலகங்களும் சகல பிரதேச செயலகங்களும்
2. இலங்கை பொலிஸ்
3. தேசிய பொலிஸ் பயிற்சி நிறுவனம்
4. பதிவாளர் நாயகத் திணைக்களம்
5. ஆட்பதிவுத் திணைக்களம்
6. குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம்
7. அரச சார்பற்ற அமைப்புகளுக்கான செயலகம்
8. அனர்த்த முகாமைத்துவ தேசிய மன்றம்
9. அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம்
10. தேசிய அனர்தத நிவாரண சேவைகள் நிலையம்
11. வளிமண்டலவியல் திணைக்களம்
12. தேசிய கட்டிடங்கள் ஆராய்ச்சி அமைப்பு