விமாப்படையின் ஆண்டு விழா கொண்டாட்டத்தினை முன்னிட்டு சமூக நலத்திட்டங்கள் முன்னெடுப்பு

மார்ச் 07, 2019

இலங்கை விமானப்படையின் 68வது ஆண்டு நிறைவை முன்னிட்டு விமானப்படையினரால் பல சமூக நலத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.

இதற்கேற்ப முல்லைத்தீவு வட்டப்பலை மகா வித்தியாலயத்தில் நிர்மாணிக்கப்பட்ட மலசல கூடங்கள் மாணவர்களின் பாவனைக்காக அண்மையில் (மார்ச், 01)ஒப்படைக்கப்பட்டது.

மேலும் முல்லைத்தீவில் உள்ள இலங்கை விமானப்படை நிலையத்தினால் முன்னெடுக்கப்படும் சமூக நலத்திட்டத்தின் ஒரு பகுதியாக முல்லைத்தீவு வைத்தியசாலையில் சிரமதான நிகழ்வு ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

அத்துடன் பள்ளிக்குடியிருப்பு செங்கதிர் முன்பள்ளிக்கு நீர் தாங்கி மற்றும் நீர் சுத்திகரிக்கும் உபகரணம் என்பனவும் முல்லைதீர்வு கேப்பாபிளவு அரசினர் தமிழ் கலவன் பாடசாலைக்கு விளையாட்டு உபகரணங்கள் என்பனவும் அன்பளிப்பு செய்யப்பட்டன.

இலங்கை விமானப்படையின் 68வது ஆண்டு நிறைவு தின கொண்டாட்டங்கள், எயார் டாட்டூ நிகழ்வு மற்றும் கண்காட்சி ஆகியன ஹிந்குராக்கொடையில் இடம்பெற்றன. அத்துடன் 'குவன் கமுதா பாபெதி சவாரி' எனும் இலங்கை விமானப்படையின் 20வது சைக்கிலோட்டப்போட்டி வெற்றிகரமாக நிறைவு பெற்றது. இதில் விமானப்படையின் ஆண்கள் மற்றும் மகளிர் அணிகள் சம்பியன்களாக வெற்றிவாகை சூடினர்.