பொலிஸார் சுமார் 200 மில்லியன் பெறுமதியான ஐஸ் ரக போதைப்பொருளை கைப்பற்றியுள்ளனர்
ஆகஸ்ட் 16, 2020அம்பலாங்கொடையின் படபாபண்டிமுள்ள பகுதியல் சுமார் 200 மில்லியன் பெறுமதியான 12 கிலோ மெத்திலினெடோக்ஸிமெதாம்பேட்டமைன் எனும் (எம் டி எம் ஏ ) ஐஸ் ரக போதைப்பொருளுடன் சந்தேக நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
நேற்று மாலை (15) மேற்கொள்ளப்பட்ட விஷேட தேடுதல் நடவடிக்கையின் போது இவ்வாறு கைது செய்துள்ளனர்.
நாட்டில் முதல் முறையாக இவ்வாறு பாரியளவிலான போதைப்பொருள் கைப்பற்றப்பட்டமை இதுவே முதல் தடவையாகும் என பொலிஸ் ஊடக பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் சாலிய சேனாரத்ன தெரிவித்தார்.
சட்டவிரோத போதைப்பொருளான ‘எம்.டி.எம்.ஏ’ ஆனது எக்ஸ்டஸி அல்லது மோலி என அறியப்படுவதுடன், இதனை நுகரும் நபர்களுக்கு உற்சாகமான உணர்வை தூண்டக்கூடியதாக காணப்படுவதாகவும் குறிப்பிடப்படுகிறது.
எம்.டி.எம்.ஏ எனும் குறித்த ரக போதைபொருள் விசேடமாக இரவு விடுதிகளுக்குச் செல்லும் இளைஞர்களிடையே பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
அம்பலாங்கொடை விஜேராம மாவத்தையில் வசிக்கும் 33 வயதுடைய குறித்த சந்தேக நபர் அம்பலாங்கொடை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார்.