யாழில் காணி விடுவிப்பு
ஜூலை 15, 2019யாழ் பாதுகாப்பு படைத் தலைமையகத்தினால் பலாலி பிரதேசத்தில் 26.4 ஏக்கர் காணிகளும், பலாலி வடக்கில் RCTM பாடசாலைக்கு பயன்படுத்தப்பட்டுவந்த ஒரு ஏக்கர் காணியும் விடுவிக்கப்பட்டுள்ளது. அண்மையில் (ஜூலை, 12) தெல்லிப்பழை பிரதேச செயலகத்தில் இடம் பெற்ற சிறு வைபவத்தின்போது இக்காணி விடுவிப்பு நிகழ்வு இடம்பெற்றுள்ளது. இதன்போது, இக்காணிகள் தொடர்பான உத்தியோகபூர்வ ஆவணங்கள் யாழ் மாவட்ட ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்களிடத்தில் யாழ் பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாராச்சி அவர்களினால் கையளிக்கப்பட்டதாக இராணுவத்தகவல்கள் தெரிவிக்கின்றன.
பின்னர், யாழ் மாவட்ட ஆளுநர் அவர்களினால் மேலதிக நடவடிக்கைகளுக்காக இக்காணிகள் தொடர்பான ஆவணங்கள் யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் திரு. எஸ் முரலிதரன் (காணிகள்) அவர்களிடம் கையளிக்கப்பட்டது. இந்நிகழ்வில் சிரேஷ்ட இராணுவ அதிகாரிகள் மற்றும் தெல்லிப்பழை பிரதேச செயலாளர் திரு. எஸ் சிவசிறி உட்பட அரச அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.