ஹெல ரணவிரு பலமுளுவவிற்கு நன்கொடையாளர் ஒருவரினால் 100,000 ரூபா அன்பளிப்பு

செப்டம்பர் 02, 2020

பொரெல்ல பகுதியில் வசிக்கும் வியாபாரியான  யூ எச் அசோக எனும் நன்கொடையாளர்   100,000 ரூபா காசோலையினை போர் வீரர்களின் நலன்புரி சேவைகளுக்காக ஹெல ரணவிரு பலமுளுவ அமைப்பிற்கு அன்பளிப்பு செய்துள்ளார்.

பாதுகாப்பு அமைச்சில் இன்று (02) இடம்பெற்ற நிகழ்வில் குறித்த காசோலையை அசோகவினால் பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரத்னவிடம் வழங்கிவைத்தார்.  

இந்நிகழ்வில் ஹெல ரணவிரு பலமுளுவ அமைப்பின் அங்கத்தவர்களும் கலந்துகொண்டனர்.