“திரிபீடகாபிவந்தனா” வாரத்தை முன்னிட்டு இடம்பெற்ற மத நிகழ்வில் பாதுகாப்பு செயலாளர் கலந்து சிறப்பிப்பு

மார்ச் 16, 2019

உலகவாழ் பௌத்த மக்களின் மரபுரிமையான தேரவாத திரிபீடகத்தை உலக மரபுரிமையாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ள “திரிபீடகாபிவந்தனா” வாரத்தை முன்னிட்டு சனிக்கிழமையன்று ( மார்ச், 16) இடம்பெற்ற மத நிகழ்வில் பாதுகாப்பு செயலாளர் திரு. ஹேமசிறி பெர்னாண்டோ அவர்கள் கலந்து சிறப்பித்துள்ளார்

இந்நிகழ்வில், 67 பௌத்த பிக்குகளின் பங்கேற்புடனான பிண்டபாத அன்னதாக நிகழ்வு ஒன்றினை சினமன் காடன் பொலிஸ் நிலையம் ஏற்பாடு செய்திருந்தது. குறித்த இந்நிகழ்வு சுதந்திர சதுக்கத்தில் சனிக்கிழமை காலை இடம்பெற்றது.

மேலும், “திரிபீடகாபிவந்தனா” வாரம் இம்மாதம் (மார்ச்) 16ஆம் திகதியிலிருந்து 23ஆம் திகதி வரை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வில், சிரேஷ்ட அரச அதிகாரிகள், இராணுவ தளபதி, பொலிஸ் மா அதிபர் ஆகியோரும் கலந்துகொண்டனர்.