ஒருங்கிணைந்த அரச பொறிமுறை இன்றியமையாததாக காணப்படுகிறது - பாதுகாப்பு செயலாளர்
செப்டம்பர் 11, 2020- தெளிவான அரச நிர்வாக பொறிமுறை ஸ்தாபிக்கப்படுவது அவசியம்
- போதைப்பொருள் பாவனையாளர்கள் மாத்திரமின்றி அதன் பிரபுக்களும் கூண்டில் அடைக்கப்படுவது உறுதி
ஊழலை ஒழிக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ளும்போது பொது நிர்வாகம், திட்டமிடல் சேவைகள், கணக்கியல் சேவை, முப்படைகள், பொலிஸ், சிறைச்சாலைகள், சுங்கத் திணைகளங்கள் என்பன ஒரு தனித்துவமான அரச நிர்வாக பொறிமுறை அமைப்பின் பிரகாரம் ஒருங்கிணைக்கப்பட வேண்டும் என பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரத்ன தெரிவித்தார்.
பத்தரமுல்ல வோட்டர்ஸ் எட்ஜ் ஹோட்டலில் இன்று (11) இடம்பெற்ற நிகழ்வில் இலங்கை நிர்வாக சேவையின் அதிகாரிகள் மத்தியில் உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய பாதுகாப்பு செயலாளர், திறமையாகவும் விரைவாகவும் மக்களின் எதிர்பார்ப்புக்களை அடைவதற்கு ஒரு தெளிவான அரச நிர்வாக பொறிமுறையை உருவாக்குவதன் தேவையை வலியுறுத்தினார்.
தற்போதைய பொறுப்புகளுக்கு மேலதிகமாக செயற்படும் இராஜாங்க அமைச்சின் செயாலாளர் நியமனம் தொடர்பில் தெரிவிக்கையில், மக்களுக்கு திறமையான சேவையை வழங்க அரச பொறிமுறைகளை ஒருங்கிணைப்பதே தனது புதிய பணியாகும் என அவர் மேலும் தெரிவித்தார்.
நாட்டில் சிறைக்கைதிகளின் எண்ணிக்கை அதிகரித்துவரும் நிலையில் அவற்றை நிவர்த்திசெய்வதற்காக போகம்பரை சிறைச்சாலையின் நிலைமைகளை ஆராய்ந்து அதன் நடவடிக்கைகளை முன்னைய தரத்திற்கு மீளமைக்கும் சாத்தியக்கூறுகளை அவதானிப்பதற்காக கண்டியில் கைவிடப்பட்ட நிலையில் காணப்படும் சிறைச்சாலைக்கு விஜயமொன்றை மேற்கொள்ள இருப்பதாகவும் அவர் இதன்போது தெரிவித்தார்.
சிறைச்சாலை ஆணையாளர் நாயகம் துஷாரா உபுல்தெனியாவின் தகவலுக்கு அமைய, போதைப்பொருளுடன் தொடர்புடைய குற்றங்களுக்காக சிறைகளில் உள்ள கைதிகளின் எண்ணிக்கை 30,000 யும் தாண்டியுள்ளதாக பாதுகாப்பு செயலாளர் தெரிவித்தார்.
போதைப்பொருள் பாவனையாளர்கள் மாத்திரமே அதற்கு சாட்சியாளர்கள் என தவறாகப் புரிந்து கொள்ள வேண்டாம் என கேட்டுக்கொண்ட அவர், போதைப்பொருள் நடவடிக்கையில் ஈடுபடும் பிரபுக்கள் சுதந்திரமாக இருப்பதாகவும் ஜனாதிபதியின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிடப்பட்டதன் பிரகாரம் அனைத்து மட்ட போதைப்பொருள் நடவடிக்கைகளையும் தடுப்பதற்காக சட்ட அமுலாக்கல் அதிகார்கள் செயற்பட்டு வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
அண்மையில் தம்புள்ளயிலுள்ள கிராமப்புற பகுதிக்கு விஜயமொன்றை மேற்கொண்டிருந்ததை நினைவுகூர்ந்த பாதுகாப்பு செயலாளர், தான் அங்கு இராணுவ முகாமொன்றில் தங்கியிருந்தவேலையில் அக்கிராம மக்கள் பத்துக்கும் அதிகமான கடிதங்களை தன்னிடம் கையளித்து போதைப்பொருள் பாவனையிலிருந்து இக்கிராமத்தை பாதுகாத்து தருமாறும் தன்னிடம் வேண்டிக்கொண்டதாக அவர் குறிப்பிட்டார்.
சட்ட அமுலாக்கல் அதிகாரிகளினால் அன்றாடம் போதைப்பொருள் கைப்பற்றப்படுவது தொடர்பில் பொதுமக்கள் விழிப்புடன் இருப்பதானது அவர்கள் தற்போது பாதுகாப்பாக இருப்பதை உணர்த்தும் எனவும் அவர் தெரிவித்தார்.
நாட்டிலுள்ள சுதந்திரத்தை அனுபவிப்பதற்கான சூழல் மக்களுக்கு கிடைக்காவிட்டால் அவர்களின் இப்பாரியமுயற்சிகளுக்கு எந்தவித பயனுமில்லை என மேஜர் ஜெனரல் குணரத்ன தெரிவித்தார்.
அண்மையில் எம்ரீ நிவ் டயமண்ட் கப்பலில் ஏற்பட்ட தீப்பரவல் தொடர்பாக தெரிவிக்கையில் குறித்த கப்பலில் ஏற்பட்ட தீயினால் வெடிப்பு ஏற்பட்டிருக்குமானால் அது ஒரு நீண்ட காலம் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய அனார்த்தமாக காணப்பட்டிருக்கும் என தெரிவித்தார்.
இருந்தபோதிலும், அனைத்து உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பங்காளர்களின் முயற்சியால் திறம்பட நிலைமையை முகாமைசெய்த்து தீயினை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.