கடினமான காலங்களில் இலங்கை வழங்கிய ஒத்துழைப்புக்கு பாகிஸ்தான் பாராட்டு
செப்டம்பர் 15, 2020இலங்கைக்கான பாகிஸ்தான் தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகர் கேர்ணல் முஹம்மத் ஸப்தார் கான் பாதுகாப்புச் செயலாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரத்னவை இன்று (செப்டம்பர்,15) சந்தித்தார்.
இரு நாடுகளுக்கிடையில் நீண்டகாலமாக நிலவும் இருதரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்பை மேற்கோள் காட்டிய கேர்ணல் ஸப்தார், கடினமான காலங்களில் பாகிஸ்தானுக்கு வழங்கப்பட்ட இலங்கையின் உதவிகளை பாராட்டினார்.
இலங்கையின் பாதுகாப்பு சேவைகள் கட்டளை மற்றும் பதவி நிலை அதிகாரிகள் கல்லூரியின் அதிகாரிகள், பாக்கிஸ்தானுக்கு ஒவ்வொரு வருடமும் விஜயம் செய்வதற்கான வசதிகளை ஏற்படுத்த தான் விரும்புவதாக அவர் மேலும் தெரிவித்தார்.
இதேவேளை, பாதுகாப்புச் செயலாளர், இரு நாடுகளுக்கிடையிலான பாதுகாப்பு உறவுகளை வலுப்படுத்திய பாகிஸ்தான் அரசுக்கு தான் நன்றி தெரிவிப்பதாக தெரிவித்தார்.
கடந்த காலங்களில் இலங்கை இராணுவத்திற்கு பாகிஸ்தான் இராணுவம் அளித்த உதவிகளையும் மேஜர் ஜெனரல் குணரத்ன இதன்போது நினைவு கூர்ந்தார்.
மேலும், பாதுகாப்புச் செயலாளர் மற்றும் பாகிஸ்தான் பாதுகாப்பு ஆலோசகர் ஆகியோருக்கிடையில் இருதரப்பு முக்கியத்துவம் வாய்ந்த விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடல் இடம் பெற்றது.
அத்துடன் இந்த நிகழ்வினை நினைவு கூறும் வகையில் நினைவுச் சின்னங்களும் பரிமாறிக்கொள்ளப்பட்டமை குறிப்பிடத் தக்கது.