புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் கஞ்சா மற்றும் மஞ்சள் விஷேட அதிரடிப்படையினரால் கைப்பற்றப்பட்டது
செப்டம்பர் 15, 2020புதுக்குடியிருப்பு, உயிலங்குளம் பகுதியில் கேரள கஞ்சா மற்றும் உலர் மஞ்சள் என்பவற்றை சட்டவிரோதமாக கடத்திச் செல்ல முற்பட்ட நால்வரை விஷேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர். குறித்த பிரதேசத்தில் இருந்து லொரி மற்றும் உழவு இயந்திரம் என்பவற்றின் மூலம் கொண்டு செல்லப்படவிருந்த 52 கிலோ கிராமுக்கு மேற்பட்ட கேரளா கஞ்சா மற்றும் 920 கிலோ கிராமுக்கு மேற்பட்ட உலர்ந்த மஞ்சள் என்பன விஷேட அதிரடிப்படையினரால் கைப்பற்றப்பட்டது.
பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்றஇரகசிய தகவலுக்கு அமைய குறித்த பிரதேசத்தில் ஒன்றிணைந்த தேடுதல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
இதன் போது சந்தேக நபர்களிடமிருந்து ரூ. 1,725,000 ரொக்கப் பணமும் 100 அமெரிக்க டொலர் நாணயத்தாள்களும் கைப்பற்றப்பட்டது.
கைதுசெய்யப்பட்டுள்ள 28 முதல் 44 வயதுகளைக் கொண்ட சந்தேக நபர்கள், உயிலங்குலம், உப்புக்குளம் மற்றும் மறந்தமடு பிரதேசத்தில் வசிப்பவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேகநபர்கள் இன்றைய தினம் மன்னார் நீதிவான் நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மன்னார் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.