இலங்கை இராணுவத்தினரால் தயாரிக்கப்பட்ட புதிய யுனிபஃபெல் மாலியில் பரீட்சாத்த நடவடிக்கையில்
செப்டம்பர் 25, 2020இலங்கை இராணுவத்தினரால் தயாரிக்கப்பட்ட ஒன்பது நவீன யுனிபஃபெல்ஸ் கவச வாகனங்கள் உட்பட ஒரு புதிய மீட்பு வாகனம் மற்றும் மூன்று கொள்கலன்கள் ஆகியன, மாலி நாட்டில் உள்ள (மினுஸ்மா) ஐக்கிய நாட்டு சமாதான அமைதிகாக்கும் பணிகளுக்காக அனுப்பிவைக்கப்பட்டுள்ளதுடன், அவை அந்நாட்டிலுள்ள கடினமான நிலப்பரப்புகளில் பரீட்சாத்த நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றன.
த்த யுனிபஃபெல்ஸ் கவச வாகனங்கள் இராணுவத்தின் மின்சார மற்றும் இயந்திரவியல் பொறியியலாளர் படையணியினரால் தயாரிக்கப்பட்டதாக இராணுவத்தகவல்கள் தெரிவிக்கின்றன.
இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வாவினால் குறித்த கவச வாகனங்கள் மேற்கு ஆபிரிக்காவிலுள்ள பின்தங்கிய பகுதிகளில் பணிபுரியும் இலங்கை அமைதிகாக்கும் படையினரின் பயன்பாட்டின் நிமித்தம் உத்தியோகபூர்வமாக இப்புதிய கவச வாகனங்கள் ஒப்படைக்கப்பட்டன.
தற்போது மாலியில் 20 அதிகாரிகள் மற்றும் 223 இராணுவச் சிப்பாய்கள் உட்பட 243 ஐ.நா. இலங்கை அமைதிகாக்கும் படையினர் மாலி அமைதிகாக்கும் படை அமைப்பில் பணியாற்றுவதுடன், 65 வாகனங்களும் சேவையிலுள்ளமை குறிப்பிடத்தக்கது.
குறித்த புதிய கவச வாகனங்களானது ஐக்கிய நாடுகள் பாதுகப்பு நடவடிக்கைகளை மேலும் வலுப்படுத்த ஒத்துழைப்பு வழங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.