வெசாக் காலத்தில் அமைதியான சூழல்
மே 21, 2019வெசாக் விடுமுறை நாட்களில் நாட்டில் அமைதியான சூழ்நிலை நிலவியது. வாழ்க்கை, இயல்பு நிலைக்கு திரும்பிக்கொண்டிருக்கிறது. இருப்பினும், பொலிஸார், முப்படையினருடனும் சிவில் பாதுகாப்பு வீரர்களுடனும் இணைந்து தேடுதல் நடவடிக்கைகளையும் விசாரணைகளையும் மேற்கொண்டுவருகின்றனர். தற்போது, உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதளுடன் தொடர்புடைய 69 பேர் குற்ற புலானாய்வு பிரிவினரால் தடுத்து வைக்கப்பட்டு விசாரணை செய்யப்படுவதாகவும் மேலும் 20 பேர் பயங்கரவாத புலானாய்வு பிரிவினரால் தடுத்து வைக்கப்பட்டு விசாரணை செய்யப்படுவதாகவும் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர அவர்கள் பாதுகாப்பு அமைச்சின் ஊடக மையத்தில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின்போது தெரிவித்தார்.
குருநாகல் அலகொலதெனிய பிரதேசத்தில் உள்ள தென்னந்தோப்பு ஒன்றில் ஒரு குழுவினர் பயிற்சி முகாம் ஒன்றை நடத்தியதாக கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய குருநாகல் பொலிஸாரினால் மூன்று நபர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்கள் மே 09 ம் திகதி கைது செய்யப்பட்டதுடன் . பின்னர் மே மாதம் 24ம் திகதி வரை அவர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். மேலதிக விசாரணைகளின் போது, மே மாதம் 11ம் திகதி மேலும் இரண்டு நபர்கள் கைதுசெய்யப்பட்டனர். இரண்டு சந்தேக நபர்களிடமிருந்தும் பல காசோலைகள் மீட்கப்பட்டுள்ளன. மற்றொரு சந்தேக நபர் குருநாகல் வைத்தியசாலையில் பணிபுரியும் ஒரு ஊழியர் ஆவார். இவர்களின் வங்கி கணக்கில் அவ்வப்போது பெரிய தொகை பணம் வைப்பிலிடப்பட்டுள்ளது.
மேலும், இந்த பயிற்சி முகாம் தொடர்பாக மே 18 ம் திகதி மற்றொரு சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் பாராளுமன்ற அன்சார்ட் பிரிவின் சிரேஷ்ட பூசிகை (இன்டெக்ஸ்) உத்தியோகத்தராக பணியாற்றி வருகிறார். அவரும் விசாரணைக்காக தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.
செய்தித்தாள் ஒன்றின் வெளியான கட்டுரை தொடர்பாக குறிப்பிட்ட பொலிஸ் பேச்சாளர், உயிர்த்த ஞாயிறுபயங்கரவாதக் குழு குண்டுத் தாக்குதலில் ஈடுபட்ட தற்கொலைத் தாக்குதல் தொடர்பாக ஸஹ்ரானின் மனைவியால் பொலிஸாரிடம் கூறப்பட்ட ஒரு ஒப்புதல் வாக்குமூலம தொடர்பில் மே மாதம் 12ம் திகதி பத்திரிகை ஒன்று முழுப்பக்க கட்டுரை வெளியிட்டிருந்தது. அது பொலிஸாரினால் வழங்கப்பட்ட உத்தியோகபூர்வ செய்திகள் அல்ல. அத்தகைய செய்தி அறிக்கைகள் தற்போதைய விசாரணைகள் மற்றும் சட்ட நடவடிக்கைகளை பாதிக்கக்கூடும் என குறிப்பிட்டதுடன் உத்தியோகபூர்வமாக வழங்கப்பட்ட தகவலை மட்டுமே வெளியிடுமாறு ஊடகங்களை கேட்டுக் கொள்வதாகவும் அவர் மேலும்