உலக சிறுவர் தினம் செரிக் நிலையத்தினால் கொண்டாடப்பட்டது
ஒக்டோபர் 01, 2020கொழும்பு நாரஹேன்பிட்டியவிலுள்ள செனஹசே கல்வி வள ஆய்வு மற்றும் தகவல் நிலையத்தில் இன்று (ஒக்டோபர்,1) இடம்பெற்ற சிறுவர் தின நிகழ்வில் முதல் பெண்மனி அயோம ராஜபக்ஷ பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்தார்.
இந்நிகழ்வின் போது செனஹசே கல்வி வள ஆய்வு மற்றும் தகவல் நிலையத்திற்கான உத்தியோகபூர்வ இணையத்தளம் www.senehasa.care.lk.அயோமா ராஜபக்ஷவினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இந்நிகழ்வை சிறப்பிக்கும் வகையில் சிறுவர்களினால் கலை நிகழ்சிகள் அரங்கேற்றப்பட்டதுடன், அவர்களை மகிழ்விக்கும் வகையில் பரிசில்களும் வழங்கிவைக்கப்பட்டன.
முப்படையினர், பொலிஸார் மற்றும் சிவில் பாதுகாப்பு திணைக்களத்தை சேர்ந்த குடும்பங்களின் விஷேட தேவையுடைய குழந்தைகளுக்காக பாதுகாப்பு அமைச்சின் கீழ் உருவாக்கப்பட்ட ஒரு நிறுவனமே செரிக் ஆகும்.
விஷேட தேவையுடைய சிறுவர்களுக்கு விஷேட கவனம் செலுத்துவதி அவர்களின் கல்வி அபிவிருத்தி மற்றும் கற்றல் செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கான ஒரு தகவல் மையமே செரிக் ஆகும்.
அத்தகைய குழந்தைகளின் உள்ளார்ந்த திறன்கள், பலம் மற்றும் பலவீனங்களை அடையாளம் காணுதல், மதிப்பீடு செய்தல், மருத்துவ ஒத்துழைப்பு, பெற்றோரின் வழிகாட்டுதல் மற்றும் ஆலோசனைகளை வழங்குதல், குழந்தைகளின் வளர்ச்சிக்கான ஆய்வுகளை ஊக்குவித்தல், தனிநபருக்கு தனித்துவமான தொழில்சார் பயிற்சிகள் போன்றன இதன் நோக்கங்களில் சிலவாகும்.
இங்கு இடம்பெற்ற சிறுவர் தின நிகழ்வில் பாதுகாப்பு அமைச்சின் சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி சித்ரானி குணரத்ன, செரிக் நிலையத்தின் மேற்பார்வை அதிகாரி திருமதி சோனியா கோட்டேகொட, முன்னாள் இராணுவ தளபதியும் முன்னாள் பாதுகாப்பு செயலாளருமான ஜெனரல் (ஓய்வு) சாந்தா கோட்டேகொட, பாதுகாப்பு படைகளின் பதில் பிரதம அதிகாரியும் இராணுவத் தளபதியுமான லெப்டினன்ட் ஜெனரல் ஷவேந்திர சில்வா மற்றும் இராணுவ சேவா வனிதா பிரிவின் தலைவி, திருமதி சுஜீவா நெல்சன், கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்தா உலுகேதென்ன மற்றும் கடற்படை சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி சந்திமா உலுகேதென்ன, விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் சுமங்கல டயஸ் மற்றும் விமானப்படை சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி பிரபாவி டயஸ், சிவில் பாதுகாப்புத் திணைக்கள பணிப்பாளர் நாயகம் ரியர் அட்மிரல் ஆனந்த பீரிஸ் சிவில் பாதுகாப்புத் திணைக்கள சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி குமுதுணி பீரிஸ், ரணவிரு சேவா அதிகாரசபையின் தலைவர் மேஜர் ஜெனரல் (ஒய்வு) நந்தன சேனாதீர, திருமதி ரேகா சேனாதீர, திருமதி சமந்தி வீரசிங்க உட்பட பாதுகாப்பு அமைச்சின் மேலதிக செயலாளர்கள் ,சிரேஷ்ட இராணுவ உயர் அதிகாரிகள், நன்கொடையாளர்கள், பெற்றோர் உட்பட முக்கியஸ்தர்கள் பலர் கலந்து சிறப்பித்தனர்.