போர்வீரர்கள் மற்றும் அவர்களின் குடும்பங்களினது பிரச்சினைகளை தீர்ப்பதற்கான புதிய மார்க்கம்
ஒக்டோபர் 03, 2020- அனுராதபுர உத்தம பூஜா நடமாடும் சேவை மூலம் போர் வீரர்களுக்கு நலன்புரி சேவைகள்
- போர் வீரர் குடும்பங்களின் பிரச்சினைகள் எதிர்காலத்தில் பாதுகாப்பு செயலாளரின் மத்தியஸ்துடன் தீர்க்கப்படும்
போர் வீரர்கள் எதிர்நோக்கும் பிரதேச செயலகங்கள் / மாவட்ட செயலகங்கள் மற்றும் கிராம உத்தியோகத்தர்கள் ஆகியவற்றுடன் தொடர்புடைய தங்கள் பிரச்சினைகளை மத்தியஸ்தம் செய்து தீர்வினைப் பெற்றுக் கொடுப்பதற்கு பாதுகாப்பு, உள்நாட்டு அலுவல்கள் மற்றும் அனர்த்த முகாமைத்துவ இராஜாங்க அமைச்சின் கீழ்" பொது பிரிவு" ஒன்று ஸ்தாபிக்கப்படவுள்ளதாக பாதுகாப்புச் செயலாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரத்ன தெரிவித்தார்.
அனுராதபுரம், சாலியபுரவில் இடம்பெற்ற இன்று இடம்பெற்ற 'போர் வீரர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வினை பெற்றுக்கொடுக்கும் நடமாடும் சேவையின் 2வது கட்டத்தில் போர் வீரர்களின் குடும்பங்கள் மத்தியில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
"இந்த பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு தான் தனிப்பட்ட முறையில் மத்தியஸ்தம் வகிக்க தயாராக இருப்பதாக குறிப்பிட்ட அவர், "உங்களது பிரச்சினைகளை எங்களிடத்தில் கொண்டு வாருங்கள், அதற்கான தீர்வினை வழங்க நாம் தயாராக உள்ளோம்" எனவும் அவர் உறுதியளித்தார்.
ராகம 'ரணவிரு செவன' வில் அங்கவீனமுற்ற படை வீரர்களுக்கான தரமான செயற்கை கால்கள் வழங்கப்படுவது தொடர்பாக குறிப்பிட்ட பாதுகாப்பு செயலாளரும் அதே போன்று தரமான செயற்கை கால்களை வழங்கும் நடவடிக்கை அங்கவீனமுற்ற படைவீரர்களை பராமரிக்கும் அனுராதபுரம் அபிமன்சல நிலையத்திற்கும் பெற்றுக்கொடுக்கும் நடவடிக்கை இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
"நாடு முழுவதும் ஸ்தாபிக்கப்பட்டுள்ள ஒவ்வொரு அபிமன்சல படைவீரர்களை பராமரிக்கும் நிலையத்திலும் மேற்குறிப்பிட்ட தரமான செயற்கை கால்கள் வழங்கும் வசதிகள் உருவாக்கப்படும் என தெரிவித்த அவர், நெரிசலைக் குறைப்பதற்காக கண்டியில் மற்றொரு இராணுவ வைத்தியசாலை நிர்மாணிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.
ஸ்தம்பித்த நிலையை அடைந்துள்ள 'அபி வெனுவென் அபி' திட்டம் தொடர்பாக கருத்து வெளியிட்ட அவர், அவற்றை மீள சிறப்பாக முன்னெடுப்பதற்காக பாதுகாப்பு அமைச்சின் சேவா வனிதா பிரிவின் தலைவியிடம் 'அபி வெனுவென் அபி' நிதியத்தின் இருப்பினை அதிகரிப்பதற்காக சாத்தியமான வழிவகைள் குறித்து ஆராயுமாறு அறிவுறுத்தியள்ளதாக குறிப்பிட்டார்.
‘அபி வெனுவென் அபி’ வீட்டுத் திட்ட பயனாளிகளைத் தேர்ந்தெடுப்பதில் முப்படை சேவா வனிதா பிரிவுகளின் தலைவிகளின் உள்ளடக்கப்பட்டிருக்காமை தொடர்பாக நினைவு கூர்ந்த அவர், முன்பு நடைமுறையில் இருந்தவாது தேர்வுக் குழுவில் அவர்களின் இருப்பு இன்றியமையாதது என அவர் குறிப்பிட்டார்.
நாட்டுக்காக தமது உடல், உயிர், அவயவங்களை தியாகம் செய்த போர் வீரர்களின் நலன்புரி நடவடிக்கைகள் தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வினைப் பெற்றுக் கொடுப்பதற்காகவே இன்றைய தினம் உங்கள் அனைவருக்கும் அழைப்பு விடுத்துள்ளோம் என பாதுகாப்புச் செயலாளர் தெரிவித்தார்.
யுத்த வெற்றி தொடப்பக நினைவு கூர்ந்த அவர், “ தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான வெற்றியின் பெருமையை பலர் கூறினாலும், தாய் நாட்டைப் பாதுகாப்பதற்காக தங்கள் அன்புக்குரிய பிள்ளைகளை போர் புரிய அனுப்பிவைத்த போர் வீரர்களின் பெற்றோர்கள் அதற்காக மரியாதை பெற வேண்டும்”என அவர் தெரிவித்தார்.
கடந்த காலங்களில் மறக்கப்பட்ட இருந்த அடைந்திருந்த 'உத்தம பூஜா ' எனப்படும் இந்தத் திட்டம் ஜனாதிபதியின் ஆலோசனைக்கு அமைய மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
இன்றைய தினம் போர்வீரர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வினைப் பெற்றுக் கொடுப்பதற்காக முப்படை மற்றும் அரச நிறுவனங்களின் சம்பந்தப்பட்ட அதிகாரிகளை இந்த இடத்திற்கு வரவழைத்து உள்ளதாகும் அவர் தெரிவித்தார்.
போர்வீரர்கள் எதிர்நோக்கும் நிர்வாக மற்றும் நலன்புரி நடவடிக்கைகள் தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வினை பெற்றுக்கொடுக்கும் வகையிலேயே போர் வீரர்களுக்கான நடமாடும் சேவை எனும் கருத்திட்டம் பாதுகாப்பு அமைச்சினால் ஆரம்பிக்கப்பட்டது.
இந்த நிகழ்வில் ரணவிரு சேவா அதிகார சபையின் தலைவர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) நந்தன சேனாதீர, பாதுகாப்பு படைகளின் பிரதம அதிகாரியும் இராணுவத் தளபதியுமான லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா, கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகே தென்ன, விமானப்படை தளபதி எயார் மார்ஷல் சுமங்கல டயஸ், பதில் பொலிஸ் மா அதிபர் சந்தன விக்ரமரத்ன, ஹெல ரணவிரு பலமுழுவ உறுப்பினர்கள், சிரேஷ்ட முப்படை அதிகாரிகள், பொலிஸ்அதிகாரிகள், மற்றும் போர் வீரர்களின் குடும்ப உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.