திவுலப்பிட்டிய மற்றும் மினுவாங்கொடை ஆகிய பொலிஸ் பிரவுகளில் ஊரடங்கு சட்டம் தொடர்ந்தும் அமுலில்
ஒக்டோபர் 04, 2020கம்பஹா மாவட்டத்தில் வேயாங்கொடை பொலிஸ் பிரிவில் இன்றுமுதல் ( ஒக்டோபர், 04) உடன் அமுலுக்கு வரும் வகையில் மறு அறிவித்தல் வரை தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுல் படுத்தப்பட்டுள்ளது.
கம்பஹா மாவட்டத்தில் திவுலப்பிட்டிய பகுதியில் வசிக்கும் 39 வயதுடைய பெண் ஒருவர் கொரோனா வைராஸ் தொற்று அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், வைரஸ் பரவலை தடுப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் கொவிட் -19 பரவலை கட்டுப்படுத்துவதற்கான தேசிய நடவடிக்கைகள் மத்திய நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன.
கொரோனா வைரஸ் அடையாளம் காணப்பட்ட பகுதிகளில் வசிப்பவர்கள் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள காலங்களில் தங்கள் வீடுகளில் தங்கி இருக்குமாறு பொலிஸார் கேட்டுக்கொள்கின்றனர்.
பொதுமக்களுக்கான பயணங்கள் உட்பட இப்பகுதிகளுக்குள் நுழைவதும் அங்கிருந்து வெளியேறுவதையும் தவிர்ந்து கொள்ளுமாறு பொதுமக்களை கேட்டுக்கொள்வதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
குறித்த நோயாளி சிகிச்சைகளுக்காக தேசிய தொற்றுநோய் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதுடன், அவருடன் நெருங்கிய தொடர்புகளை பேணியோர் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக குறித்த நிலையம் மேலும் தெரிவிக்கிறது.
அண்மையில் அடையலாம் காணப்பட்ட குறித்த நோயாளியுடன் தொடர்புகளை பேணியோர் அனைவருக்கும் சுகாதார அமைச்சினால் பீ சீ ஆர் பரிசோதனைகள் மேட்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதேவேளை இம்மாதம் ஒக்டோபர் ஒன்பதாம் திகதி வழங்க இருந்த பாடசாலை விடுமுறையானது கொரோனா வைரஸ் பரவல் காரணமாக நாளைமுதல் (5) ஒருவாரத்திற்கு முன்னரே விடுமுறை வழங்க கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளதாக அறிவித்துள்ளது.
மேலும் களனி பல்கலைக்கழகம் மற்றும் யக்கல, கம்பஹா விக்கிரம ஆராய்ச்சி ஆயுர்வேத கல்விநிலையம் என்பனவும் ஒரு வாரத்திற்கு முன்னரே நாளைமுதல் (5) மூடப்படுவதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை, நய்வள கம்பகஹா உயர் தொழிநுட்ப கல்லூரி நாளைமுதல் மூடப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அண்மைய வைரஸ் பரவலுக்கான காரணத்தை கண்டறிய விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.