ஆட்பதிவு திணைக்களத்தினால் மட்டுப்படுத்தப்பட்ட சேவைகள்
ஒக்டோபர் 06, 2020நாட்டில் மீண்டும் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ஆட்பதிவு திணைக்களத்தின் பிரதான தலைமையகம் மற்றும் பிராந்திய காரியாலயங்களின் ஊடாக எதிர்வரும் 7,8 மற்றும் 9ம் திகதிகளில் மட்டுப்படுத்தப்பட்ட சேவைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக ஆட்பதிவு திணைக்களம் தெரிவித்துள்ளது.
கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ள பரீட்சார்த்திகள் மற்றும் அவசரமாக அடையாள அட்டை தேவைப்படுபவர்கள் இது தொடர்பில் கோரிக்கைகளை விடுக்க ஆட்பதிவுத் திணைக்களத்தின் கீழ் வரும் தொலைபேசி இலக்கங்களுக்கு அழைப்பினை ஏற்படுத்த மாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
தலைமையகம் - 0115 266 150 or 0115 226 115
பிராந்தியக் காரியாலயங்கள்
- காலி – 091 222 8348
- குருநாகல் – 037 222 4337
- வவுனியா – 025 222 7201
- மட்டக்களப்பு – 065 222 9449
சேவைகள் மீண்டும் வழமைக்கு திரும்பியதுடன் ஒரு நாள் சேவைக்கு ஏற்கனவே கோரப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு முன்னுரிமை சேவை வழங்கப்படும் என ஆட்பதிவு திணைக்களம் தெரிவித்துள்ளது.