இராணுவத்தின் 71ஆவது ஆண்டு விழா நிகழ்வுகள் இரத்து
ஒக்டோபர் 07, 2020கம்பஹா மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள புதிய கொரோனா வைரஸ் பரவல் காரணமாக இராணுவத்தின் 71ஆவது ஆண்டு விழா நிகழ்வுகள் அனைத்தும் உடன் அமுலுக்கு வரும் வகையில் தற்காலிகமாக இரத்து செய்யப்பட்டுள்ளன.
இலங்கை இராணுவத்தின் ஆண்டு விழா வருடாந்தம் ஒக்டோபர் 10ம் திகதி வெகு விமர்சையாக கொண்டாப்பட்டுவருகின்றது.
எனினும் இவ்வாண்டு இராணுவத்தின் ஆண்டு விழா நிகழ்வுகள் அனைத்தும் உடன் அமுலுக்கு வரும் வகையில் பாதுகாப்பு படைகளின் பிரதம அதிகாரியும் கொரோனா வைரஸ் பரவலைத்தடுக்கும் தேசிய செயற்பாட்டு மத்திய நிலையத்தின் தலைவருமான லெப்டினன்ட் ஜெனரல் ஷவேந்திர சில்வாவினால் தற்காலிகமாக இரத்து செய்யப்பட்டுள்ளதாக இராணுவம் தெரிவித்துள்ளது.
இராணுவத்தின் 71ஆவது ஆண்டு விழா நிகழ்வுகள் முப்படைகளின் தளபதியான அதிமேதகு ஜனாதிபதி தலைமையில் இம்மாதம் 10ம் திகதி காலி முகத்திடலில் இடம்பெறவிருந்தமை குறிப்பிடத்தக்கது.