2020க்கான ஷார்ப் ஷூட்டர் சாம்பியன்ஷிப் போட்டியில் இலங்கை விமானப்படையினர் வெற்றி
ஒக்டோபர் 08, 2020சர்வதேச பிரக்டிகள் ஷூட்டிங் அமைப்பினால் கண்டியில் நடாத்தப்பட்ட ‘ஷார்ப் ஷூட்டர் சாம்பியன்ஷிப்- 2020’ போட்டியில் இலங்கை விமானப்படை ஷூட்டிங் குழுவினர் சாம்பியனாக தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
கண்டியிலுள்ள கந்தான ஹில் கன்றி ஸ்போட் ஷூட்டிங் பகுதியில் நடைபெற்ற இந்நிகழ்வில், இலங்கை விமானப்படை ஷூட்டர்கள் 11 தங்கப்பதக்கங்களையும் 9 சில்வர் பதக்கங்களையும் 7 வெண்கலப்பதக்கங்களையும் தமதாக்கிக் கொண்டுள்ளனர்.
சர்வதேச பிரக்டிகள் ஷூட்டிங் அமைப்பினால் நடாத்தப்படும் ‘ஷார்ப் ஷூட்டர் சாம்பியன்ஷிப் - 2020’ என்பது சர்வதேச ரீதியில் அங்கீகரிக்கப்பட்ட ‘லெவல் III’ போட்டியாகும். எதிர்வரும் சர்வதேச போட்டிகளில் இலங்கை சார்பாக கலந்துகொள்ளும் வகையில் தேசிய ரீதியில் ஷார்ப் ஷூட்டர்களை தேர்ந்தெடுப்பதற்கான ஒரு பரீச்சார்த்த நடவடிக்கையாகும்.
நாடளாவிய ரீதியிலுள்ள 16 ஷூட்டிங் சங்கங்களில்ருந்து முப்படையினர் மற்றும் பொலிஸார் உட்பட சுமார் 183 சிறந்த ஷூட்டர்கள் இந்நிகழ்வில் பங்கேற்றனர்.
மூன்று பிரிவுகளின் கீழ் இடம்பெற்ற 27 இந்நிகழ்வுகளில் இலங்கை விமானப்படை குழுவில் அதிகாரி ஒருவர் உட்பட 14 விமானப்டை வீரர்கள் மாற்றம் ஐந்து விமானப்டை வீராங்கனைகள் கலந்து கொண்டனர்.