--> -->

ஒரு சமாதான தசாப்தத்தை நினைவுகூரும்

மே 18, 2019

வீரமிக்க யுத்த வீரர்களால் இலங்கையில் மூன்று தசாப்தங்களாக நிலவிய பயங்கரவாதத்தை ஒழித்ததில் இருந்து சமாதானத்தின் ஒரு தசாப்த காலத்தை நிறைவுசெய்து நினைவுகூரும் நாள் 2019.05.19ஆம் நாளாகும்.

“தசவர்ஷிகஅபிஷேக” நினைவு தினத்துடன் இணைந்து நினைவுகூரும் வகையில், நாட்டுக்காக தங்களது உயிரை தியாகம் செய்த, முப்படை, பொலிஸ் மற்றும் சிவில் பாதுகாப்பு படை வீரர்களின் ஞாபகார்த்தமாக நாடுபூராகவும் 2019.05.19ஆம் திகதி 1900 மணியளவில் நாடளாவிய ரீதியில் உள்ள முப்படை தளங்களிலும் பொலிஸ் நிலையங்களிலும், அனைத்து வணக்கஸ்தலங்களிலும், அரச மற்றும் தனியார் துறை நிறுவனங்களிலும், வீடுகளிலும், “சமாதான விளக்கு“ எனும் தீபத்தினை ஏற்றுமாறு பொதுமக்களிடம் வேண்டப்படுகிறது.