6,648 பிசிஆர் பரிசோதனைகள் முன்னெடுப்பு
ஒக்டோபர் 13, 2020நேற்றைய தினம் மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனைகளின் போது 92 புதிய தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதனால் நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 4,844 பதிவாகியுள்ளதாக கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் பேசிய மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
நேற்றைய தினம் அடையாளம் காணப்பட்டுள்ள தொற்றாளர்களில் 90 பேர் மினுவாங்கொடை ஆடைத் தொழிற்சாலை கொத்தணி தொற்றாளர்களுடன் நெருங்கி பழகியவர்கள் எனவும் ஏனைய இருவரும் நாட்டுக்கு வருகை தந்த வெளிநாட்டவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, மினுவாங்கொடை கொத்தணியில் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 1,397ஆக அதிகரித்துள்ளது.
நாட்டில் இதுவரை 3 லட்சத்து 36 ஆயிரத்து 752 பிசிஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் நேற்றைய தினம் மாத்திரம் 6,648 பிசிஆர் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது எனவும் ,படையினரால் நிர்வாகிக்கப்படும் 90 தனிமைப்படுத்தல் நிலையங்களில் 10,281 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் எனவும் கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் தேசிய மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
மேலும் இதுவரை தனிமைப்படுத்தல் காலத்தைப் பூர்த்தி செய்த 56 ஆயிரத்து 480 பேர் தனிமைப்படுத்தல் நிலையத்தில் இருந்து வெளியேறி உள்ளதாகவும் அந்நிலையம் தெரிவித்துள்ளது.