அவசர நிலைமைகளுக்காக 100 படுக்கைகளுடன் தயாரான நிலையில் வடக்கு இராணுவ வைத்தியசாலை

ஒக்டோபர் 14, 2020

அவசர நிலைமைகள் ஏற்படுமாயின் அவற்றை எதிர் கொள்ளத் தக்க வகையில் நூறு படுக்கைகளுடன் இராணுவ வைத்திய சாலை தயார் படுத்தப்பட்டுள்ளதாக கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் தேசிய செயற்பாட்டு மையத்தின் தலைவரும் பாதுகாப்பு படைகளின் பிரதம அதிகாரியும் இராணுவத் தளபதியுமான லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.

கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் தேசிய செயற்பாட்டு மையத்தில் நேற்றைய தினம் இடம்பெற்ற சந்திப்பின் போது, வடக்கு பிராந்தியத்தில் ஏதாவது அவசர நிலைமைகள் ஏற்படுமாயின் நோயாளிகளை தங்க வைப்பதற்கான சுகாதார சேவைகள் தயார்நிலை படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி பதில் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்திடம் உறுதியளித்தார்.

மேலும் தேவையான அனைத்து வசதிகளும் குறித்த வைத்தியசாலையில் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இந்த சந்திப்பில் சுகாதார அமைச்சின் செயலாளர் மேஜர் ஜெனரல் வைத்தியர். சஞ்சீவ முனசிங்க மற்றும் சுகாதாரத் துறையுடன் தொடர்புடைய முக்கியஸ்தர்களும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.