கட்டுநாயக்க பொலிஸ் பிரிவில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுல்

ஒக்டோபர் 15, 2020

கட்டுநாயக்க பொலிஸ் பிரிவுக்குற்பட்ட பகுதிகளில் இன்று காலை 5.00 மணி முதல் மறுஅறிவித்தல் வரை தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

எனினும், கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்தில் பணிபுரியும் பணியாளர்கள் தமது அலுவலக அடையாள அட்டையை ஊரங்குச் சட்ட அனுமதி பத்திரமாக பயன்படுத்தி அலுவலகங்களுக்கு செல்ல முடியும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.