சிறைச்சாலைகளில் நெரிசலை குறைத்தல் தொடர்பான கலந்துரையாடல்

ஒக்டோபர் 15, 2020

சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு மற்றும் கைதிகள் புனர்வாழ்வு இராஜாங்க அமைச்சர் டொக்டர் சுதர்ஷினி பெர்னாண்டோபுள்ளே  பாதுகாப்பு செயலாளரை இன்று  சந்தித்தார்.

பாதுகாப்பு அமைச்சில் இடம்பெற்ற இந்த சந்திப்பின் போது களுத்துறை, பல்லன்சேன மற்றும் மஹர சிறைச்சாலைகளில் நெரிசலைக் குறைத்தல், முப்படை மற்றும் சிவில் பாதுகாப்பு படையினரின் ஒத்துழைப்புடன் புதிய உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தல் உள்ளிட்ட சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு பணிகள் குறித்து  கலந்துரையாடப்பட்டன.

புதிய சிறைச்சாலை உத்தியோகத்தர்களை புதிதாக உள்ளீர்ப்பு செய்தல்  'நவ திகந்தய' மற்றும் வீரவில போதைப்பொருள் புனர்வாழ்வு நிலையங்களை அபிவிருத்தி செய்தல் என்பன  குறித்தும் இந்த சந்திப்பின்போது கலந்துரையாடப்பட்டது.

பாதுகாப்பு செயலாளராக நியமிக்கப்பட்ட பின்னர் மேஜர் ஜெனரல் குணரத்னவினால் முன்னெடுக்கப்பட்டுள்ள  நடவடிக்கைகளை இராஜாங்க அமைச்சர் பெர்னாண்டோபுள்ளே பாராட்டியமை குறிப்பிடத்தக்கது.