--> -->

ஆய்வுகள் மற்றும் அபிவிருத்திக்கான நிலையத்தினை பார்வையிட பாதுகாப்பு செயலாளர் விஜயம்

ஜூலை 14, 2019

பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் எஸ்எச்எஸ்.கோட்டேகொட (ஓய்வு) டப்டப்வீ ஆர்டப்பீ ஆர்எஸ்பி வீஎஸ்வீ யுஎஸ்பி என்டிசி அவர்கள் ஆய்வுகள் மற்றும் அபிவிருத்திக்கான நிலையத்தினை பார்வையிடும் வகையில் நேற்று (ஜூலை, 13) விஜயம் ஒன்றை மேற்கொண்டார்.
இங்கு விஜயம் மேற்கொண்ட செயலாளர் அவர்களை ஆய்வுகள் மற்றும் அபிவிருத்திக்கான நிலையத்தின் பணிப்பாளர் பிரிகேடியர் கலாநிதி. டிரான் டி சில்வா அவர்கள் வரவேற்றார்.

இங்கு வருகைதந்த பாதுகாப்புச் செயலாளர் அவர்களுக்கு ஆய்வுகள் மற்றும் அபிவிருத்திக்கான நிலையத்தின் நடவடிக்கைகள் மற்றும் அதன் புதிய கண்டுபிடிப்புகள் தொடர்பாக அதிகாரிகளினால் தெளிவுபடுத்தப்பட்டது.

மேலும், இந்நிகழ்வினை நினைவு கூறும் வகையில் ஆய்வுகள் மற்றும் அபிவிருத்திக்கான நிலையத்தின் பணிப்பாளர் அவர்களினால் செயலாளர் அவர்களுக்கு நினைவுச் சின்னமும் வழங்கிவைக்கப்பட்டது.