லெபனானில் உள்ள இலங்கை படையினர் APC மற்றும் MPMG ஆயுதங்களுடன் கூட்டுப் பயிற்சி

ஒக்டோபர் 17, 2020

லெபனானில் ஐக்கிய நாடுகளின் இடைக்காலப் படையில் பணியாற்றும் இலங்கை படையினர் அண்மையில்  ‘எக்ஸ்-ஸ்டீல் ஸ்ரோம் - 2020’   எனும் ஐந்து நாட்களை கொண்ட நேருக்கு நேர் துப்பாக்கிச் சூட்டு  பயிற்சியில் பங்கேற்றது,

இந்தக் கூட்டுப் பயிற்சியில் பிரான்ஸ் இத்தாலி, ஸ்பெயின், பின்லாந்து, அயர்லாந்து, ஜெர்மனி, ஸ்லோவேனியா, கானா, தென் கொரியா, மலேசியா, நேபாளம், இந்தியா, இந்தோனேஷியா, சேர்பியா, பிரேசில், வங்காளதேசம், சீனா, போலாந்து மற்றும் லெபனான் ஆகிய நாடுகளைச் சேர்ந்த படை வீரர்கள் கலந்து கொண்டனர்.

இந்தக் கூட்டுப் பயிற்சியில் இலங்கை படையணியில் 3 அதிகாரிகள் இருபத்தி ஏழு படை வீரர்கள் கலந்து கொண்டதுடன் படை வீரர்களைச் சுமந்து செல்லும் இயந்திரத் துப்பாக்கிகள், ஐந்து பல்நோக்கு இயந்திரத் துப்பாக்கிகள் பொருத்தப்பட்ட 4 கவச வாகனங்கள், 10 தனிநபர் துப்பாக்கிகள் என்பனவும் பயன்படுத்தப்பட்டன.

2004ம் ஆண்டு முதல்  ஐக்கிய நாட்டு சபையின் அமைதி காக்கும் படையணியில் இலங்கைப் படையினர் தமது பங்களிப்பினை வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Tamil