கொரோனா வைரஸ் தொற்று குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 3397 ஆக உயர்வு

ஒக்டோபர் 18, 2020

கடந்த 24 மணித்தியாலங்களில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 10 பேர் குணமடைந்ததையடுத்து கொரோனா வைரஸ் தாக்கத்திலிருந்து குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 3397 ஆக உயர்வடைந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

இதற்கமைய, வெலிகந்த வைத்தியசாலையிலிருந்து நால்வரும், இரனவில வைத்தியசாலையில் இருந்து ஒருவரும், தொற்றுநோய்கள் பிரிவு வைத்தியசாலையில் இருந்து மூவரும், ஹம்பாந்தோட்டை வைத்தியசாலையிலிருந்து இருவரும் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 121 பேர் நேற்றைய தினம் புதிதாக அடையாளம் காணப்பட்டதையடுத்து நாட்டின் கரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 5,475 ஆக அதிகரித்துள்ளது எனவும் வைரஸ் தொற்றுக்குள்ளான 1946 பேர் தொடர்ந்து வைத்திய பராமரிப்பில் வைக்கப்பட்டுள்ளனர் எனவும் சுகாதார அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 13 என்பது குறிப்பிடத்தக்கது.