கொரோனா வைரஸ் தொடர்பான தகவல்களுக்காக 1999 எனும் துரித அழைப்பு தொலைபேசி இலக்கம் சுகாதார அமைச்சினால் அறிமுகம்

ஒக்டோபர் 18, 2020

கொரோனா வைரஸ்  தொடர்பான அனைத்து தகவல்களையும்   சுகாதார மேம்பாட்டு பணியகத்தின் துரித அழைப்பு தொலைபேசி இலக்கமான  1999 ஐ  அழைத்து பெற்றுக்கொள்ள முடியும் என  சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று இடம்பெற்ற சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இதற்கமைய, கொரோனா வைரஸ் தாக்கத்திலிருந்து பாதுகாத்துக் கொள்ளும் வழிமுறைகள் மற்றும் அதனுடன் தொடர்புடைய வழிகாட்டுதல்கள்  என்பவற்றை பொது மக்கள் பெற்றுக்கொள்ள முடியும்.

மேலும் இந்த சேவையானது, சிங்கள, தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் 24 மணி நேரமும் கிடைக்கப்பெறவுள்ளது. இதன் மூலம் கொரோனா வைரஸ் தொடர்பான தகவல்  உதவிக்கு பொதுமக்கள் மருத்துவர்களை தொடர்பு கொள்ளவும் முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.