களுத்துறை மாவட்டத்தின் மூன்று பிரதேசங்கள் தனிமைப்படுத்தலில்

ஒக்டோபர் 18, 2020

களுத்துறை மாவட்டத்தின் கொரோனா வைரஸ் பரவும் அபாயம் உள்ள  மூன்று பிரதேசங்கள் மறு அறிவித்தல் வரை முடக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

இதற்கமைய, ஒவிடிகல, பதுகம, பதுகம நவ ஜனபதய ஆகிய கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.

தனிமைப் படுத்தப்பட்டுள்ள இந்த கிராமங்களில் பொதுமக்கள் உட்பிரவேசிப்பதோ  அல்லது வெளியேறிச் செல்வதோ தடை செய்யப்பட்டுள்ளது.

எனினும்  மேற் குறிப்பிட்ட பிரதேசங்களில் கல்வி பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றும் பரீட்சார்த்திகள் பரிட்சை நிலையங்களுக்குச் செல்ல அனுமதிக்கப்படுவார்கள் என பொலிஸ் தலைமையகம் உறுதிப்படுத்தியுள்ளது.