வன்முறைகள் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுப்பு

மே 17, 2019

மினுவங்கொட பிரதேசம் உட்பட வடமேல் மாகாணத்திலும் இடம்பெற்ற வன்முறை தொடர்பாக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. மேலும் குற்றவாளிகளையும் அவர்களின் பின்புலத்தில் இருந்து செயல்படுவோரையும் கண்டுபிடிக்கும் வகையில் உளவுத்துறை அதிகாரிகள் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். இவ்வாறு வன்முறை தொடர்பில் சம்பத்தப்பட்டவர்கள் பொலிஸ் அல்லது நீதிமன்றங்களில் சரணடைய முடியும் என கொள்ளுப்பிட்டி பாதுகாப்பு அமைச்சின் ஊடக மையத்தில் நேற்று (மே, 16) இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார்.

நாட்டின் பாதுகாப்பை பலப்படுத்தும் வகையில் முப்படையினர் மற்றும் பொலிஸார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இன்று (மே, 16) எந்தவொரு பகுதியிலும் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படவில்லை.

இதேவேளை, உயிர்த்த ஞாயிறுதின தற்கொலை தாக்குதல் சம்பவத்தின் பிரதான சூத்திரதாரியுடன் நெருங்கிய தொடர்புடைய நபரான வத்தள, மாபோலயை வசிப்பிடமாககொண்ட சந்தேகனபரான மொஹமட் ரிஸ்வான் புதன்கிழமையன்று (மே, 15) கைதுசெய்யப்பட்டுள்ளார்.

முன்னைய வருடத்தை போல் இம்முறையும் வெசாக் நிகழ்வை கொண்டா டும்வகையில் அதிகபட்ச பாதுகாப்பினை வழங்கும் வகையில் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. கொழும்பு மற்றும் ஏனைய நகரங்களிலும் இருந்து வருகைதருவோரின் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்துவதற்கு பொலிஸ் உத்தியோகத்தர்கள் ஈடுபடுத்தப்படுவார்கள் என மேலும் அவர் தெரிவித்தார்.