200கிலோவுக்கு மேற்பட்ட கேரள கஞ்சா பறிமுதல்

ஒக்டோபர் 20, 2020

மன்னார் ஒலுத்துடுவை பகுதியில் இலங்கை கடற்படையினர் மற்றும் பொலிஸார் இணைந்து மேற்கொண்ட விசேட நடவடிக்கையின் போது 200 கிலோ மற்றும் 825 கிராம் எடைகொண்ட கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டது.

மன்னாரில் மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கையின் போது மன்னார் பொலிஸ் பிரிவு உப பிரிவுடன் இணைந்து வடமத்திய கடற்படை  கட்டளையகத்தினால் 200 கிலோ மற்றும் 825 கிராம் கேரளா கஞ்சாவை கைப்பற்றப்பட்டது.

கடல் வழியாக 10 பொலித்தீன் சாக்குகளில் கடத்தி கொண்டுவரப்பட்ட கேரள கஞ்சா 94 பொதிகளில் பொதியிடப்பட்டு விநியோக நடவடிக்கைகளுக்காக ஒலுத்துடுவை கடற்கரைப்பகுதியில் மறைத்து  வைக்கப்பட்டிருந்ததாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.

கைப்பற்றப்பட்ட கஞ்சா தொகுதி மேலதிக விசாரணைகளுக்காக மன்னார் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.