அவசர நிலைநிலைமைகளை சமாளிக்க இராணுவத்தினரால் நிர்மாணிக்கப்படும் கண்டக்காடு வைத்தியசாலை

ஒக்டோபர் 21, 2020

அவசர நிலைநிலைமைகள் மேலும் தீவிரமடைந்தால் சுகாதார திணைக்களத்திற்கு வழங்குவதற்காக 400க்கும் அதிகமான படுக்கைகளைக் கொண்ட வைத்தியசாலை ஒன்றை  கண்டக்காடு பிரதேசத்தில் அமைக்கவுள்ளதாக கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் தேசிய செயற்பாட்டு மத்திய நிலையத்தின் தலைவரும் பாதுக்காப்பு படைகளின் பிரதம அதிகாரியும் இராணுவ தளபதியுமான லெப்டினென்ட் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்தார்.

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான நபர் ஒருவர் திருமண வைபவம் ஒன்றில் கலந்து கொண்டமை காரணமாக அந்த வைபவத்தில் கலந்து கொண்ட சிலருக்கு தொற்று ஏற்பட்டதாக  கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் தேசிய செயற்பாட்டு மத்திய நிலையத்தில் நேற்று மதியம் இடம்பெற்ற அவசர செயற்குழு கூட்டத்தின் போது அவர் தெரிவித்தார்.  

நிலைமையைக் கட்டுப்படுத்துவதற்க அனைவும்  சமுதாயப் பொறுப்பைக் கண்டிப்பாகப் பின்பற்ற வேண்டியதன் அவசியத்தை அவர் வலியுறுத்தினார். அனைத்து பிரஜைகளும் உண்மையான தகவல்களை வழங்குவது பெரும்பாலும் தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள அனைவருக்கும் பணிகளை எளிதாக்கும் என குறிப்பிட்டார்.

இந்த நிகழ்வில்  சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், ஏனைய அனைத்து செயலணி உறுப்பினர்கள் மற்றும் துறை சார்ந்த நிபுணர்கள் ஆகியோர்  கலந்து கொண்டனர்.