கொட்டாஞ்சேனை பொலிஸ் பிரதேசத்தில் ஊரடங்குச்சட்டம் பிறப்பிப்பு

ஒக்டோபர் 22, 2020

கொழும்பு மாவட்டத்தில் உள்ள கொட்டாஞ்சேனை பொலிஸ் பிரதேசத்தில் இன்று மாலை 6.00 மணி முதல் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்படவுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இவ்வாறு அமுல்படுத்தப்படும் ஊரடங்குச்சட்டம் மறு அறிவித்தல் வரை குறித்த பிரதேசத்தில் அமுலில் இருக்கும் என அத் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.