கொரோனா வைரஸுக்கு சிகிச்சையளிக்கும் வைத்தியசாலையாக மாற்றப்பட்டுள்ள தனிமைப் படுத்தல் மையத்தை இராணுவத்தினர் கையளிப்பு

ஒக்டோபர் 24, 2020

கொரோனா வைரஸுக்கு சிகிச்சையளிக்கும் வைத்தியசாலையாக மாற்றப்பட்டுள்ள தனிமைப் படுத்தல்  மையத்தை இராணுவத்தினர் சுகாதார அதிகாரிகளிடத்தில் நேற்று கையளித்தனர்.

குறித்த தகவலை கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் தேசிய செயற்பாட்டுத் மையத்தின் தலைவர் செயலணியின் உறுப்பினர்கள் மற்றும் நிபுணர்கள் அடங்கியகுழுவினர் மத்தியில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

கூட்டத்தில், சுகாதார ஊழியர்களிடையே வைரஸ் தொற்று அபாயத்தை வெகுவாகக் குறைக்கும் சிறந்த சுகாதாரப் பழக்கவழக்கங்களுடன் விழிப்புணர்வு திட்டங்களை நடத்துவதன் அவசியத்தை அவர் மேலும் வலியுறுத்தினார்.

சுகாதார வழிகாட்டுதலுக்கு அமைய இடம்பெற்ற இந்த நிகழ்வில் பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றுமாறும் தேவையின்றி வெளியில் செல்வதை தவிர்த்துக் கொள்ளுமாறும் லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்தார்.