இலங்கையின் கொரோனா வைரஸ் காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 15 ஆக உயர்வு

ஒக்டோபர் 24, 2020

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மற்றுமொரு நபர் இன்றைய தினம் உயிரிழந்ததையடுத்து இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 15 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் குளியாப்பிட்டிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த குளியாபிட்டிய, கிதலாவ பகுதியைச் சேர்ந்த 56 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

உயிரிழந்த நபர் இருதயம் மற்றும் சிறுநீரக நோய்களுக்காக அதி தீவிர சிகிச்சை பிரிவு சிகிச்சை பெற்று வந்தவர் என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.