இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 7521 ஆக அதிகரிப்பு

ஒக்டோபர் 25, 2020

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் சிலர் அடையாளம் காணப்பட்டதையடுத்து நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று உள்ளவர்களின் எண்ணிக்கை 7521 ஆக அதிகரித்துள்ளது. இதில் மினுவாங்கொடை ஆடைத் தொழிற்சாலை மற்றும் பேலியகொடை  மீன் சந்தை கொரோனா கொத்தணியில் வைரஸ் தொற்றுக்குள்ளான 3958 பேர் அடங்குகின்றனர்.

இதேவேளை, கடந்த 24 மணித்தியாலங்களில்  கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி நிலையில் சிகிச்சை பெற்று வந்த மேலும் 70 பேர் குணமடைந்ததையடுத்து கொரோனா வைரஸ் தொற்று குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 3714 ஆக அதிகரித்துள்ளது.

மேலும்,  கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகிய 3792 பேர் வைத்தியசாலைகளில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.