மேலும் சில நகரங்களிலும் தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் அமுல்

ஒக்டோபர் 25, 2020
  •    அத்தியா வசிய பொருட்களுக்கான கடைகள் மற்றும் மருந்தகங்கள் திறக்கப்படும் ...

கொழும்புக் கோட்டை, புறக்கோட்டை, பொரள்ளை மற்றும் வெலிக்கடை போலீஸ் பிரிவுகளில் இன்று மாலை 6 மணி முதல் மறு அறிவித்தல் வரை தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, கம்பஹா மாவட்டத்தில் உள்ள அனைத்து வங்கிக் கிளைகளும் நாளை (ஒக்,26) முதல் திறக்கப்பட உள்ளதாகவும் வங்கி ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் அவர்களின் சேவை அடையாள அட்டையினை ஊரடங்குச் சட்ட அனுமதி பத்திரமாக சமர்ப்பிக்க முடியும் என கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் தேசிய மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

மேலும் கம்பஹா மாவட்டத்தில் காணப்படும் அத்தியாவசிய விற்பனை பொருட்களை விற்பனை செய்யும் கடைகள் மற்றும் மருந்தகங்கள் காலை 8.00 மணி முதல் இரவு 10.00 மணி வரை திறக்கப்படும் என அந் நிலையம் மேலும் தெரிவித்துள்ளது.