நாட்டின் பல பாகங்களில் மழை பெய்யும் சாத்தியம் - வளிமண்டலவியல் திணைக்களம்

ஒக்டோபர் 26, 2020

வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை, முல்லைத்தீவு, வவுனியா மற்றும் மாத்தளை மாவட்டங்களிலும் பல இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது

இப் பிரதேசங்களில் சில இடங்களில், குறிப்பாக திருகோணமலையில் 50 மி.மீ க்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்வு கூறியுள்ளது .

இடியுடன் கூடிய மழைக்காலங்களில் தற்காலிகமாக  வலுவான காற்று மற்றும் மின்னல் ஆகியவற்றினால் ஏற்படும் பாதிப்புகளைக் குறைக்க போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொது மக்களை அறிவுறுத்தியுள்ளது.

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சிறிதளவில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.