கடத்தலுக்கு தயாரான நிலையில் இருந்த கஞ்சா படையினரால் கண்டுபிடிப்பு

ஒக்டோபர் 27, 2020

கடத்தலுக்கு தயாரான நிலையில் பேசாலை, ஒலுத்துடுவை கடற்கரையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 26.9 கிலோகிராம் கேரள கஞ்சாவை இராணுவத்தினர் கைப்பற்றியுள்ளனர்.

வன்னி பாதுகாப்புப் படை தலைமைகத்துக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைய மன்னாரை தளமாகக் கொண்டுள்ள 54 வது படைப்பிரிவின் படைவீரர்கள் நாள் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில்  கஞ்சா கைப்பற்றப்பட்டது

நாட்டிலிருந்து போதைப்பொருளை இல்லாதொழிக்கும் நடவடிக்கை ஒரு பகுதியாக இப்பிராந்தியத்தில் வன்னி பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் பிரியந்த பெரேராவின் கட்டளைக்கு அமைய போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகள்
படையினரால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இவ்வாறு கைப்பற்றப்பட்ட கேரள கஞ்சா மேலதிக விசாரணைகள் மற்றும் சட்ட நடவடிக்கைகளுக்காக பொலிஸாரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

Tamil