கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் பணிகளில் இராணுவத்தினர்
ஒக்டோபர் 27, 2020எந்த ஒரு சவாலுக்கும் இராணுவமும் பொலிஸாரும் வெற்றிகரமாக முகம் கொடுப்பதற்குறிய உயர்ந்த செயல்திறனை கொண்டிருப்பதனால், 2020, மார்ச் 11 முதல் உலகளாவிய ரீதியல் தொற்று நோய் பரவலடைந்துள்ளது என உலக சுகாதார ஸ்தாபனம் அறிவித்த காலத்திலிருந்து இலங்கையில் நிலவிய மூன்று முக்கிய வைரஸ் கொத்தணிகளை கட்டுக்குள் கொண்டு வருவதில் இலங்கை அரசு வெற்றிகண்டுள்ளது.
ஒப்பீட்டளவில், கொரோனா வைரஸ் பரவலின் நான்காவது கொத்தணியில் (மினுவாங்கொடை மற்றும் பேலியகொடை கொத்தணிகள் என அடையாளம் காணப்பட்டுள்ளது), இம்மாதம் 25 ஆம் திகதி வரை சுமார் 4049 தொற்றாளர்கள் பதிவாகியுள்ளனர். ஆரம்ப கட்டங்களில் 1601 தொற்றாளர்கள் பதிவாகியிருந்த கடற்படை மற்றும் கண்டகாடு கொத்தணிகள் சமூக-பொருளாதாரத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தது. இதனை அடிப்படையாக கொண்டே, வைரஸ் பரவாமல் தடுப்பதற்கான அண்மைய சுற்றறிக்கைகள் மற்றும் வழிகாட்டுதல்கள் சுகாதார அமைச்சினால் (தொற்றுநோயியல் பிரிவு) பொதுமக்களுக்காக வெளியிடப்பட்டுள்ளன.
பாதிக்கப்பட்டவர்களைக் கண்டுபிடிப்பதில் உள்ள சிரமம், வைரஸின் உக்கிர நிலை, பரந்த புவியியல் பகுதியில் பரவுதல், அதிக எண்ணிக்கையிலான நபர்கள் பாதிக்கப்படல் போன்ற பல காரணங்களால் நான்காவது பரவல் மிகவும் கடுமையான நிலையில் உள்ளது. முன்னர் முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகளுக்கு மேலதிகமாக முப்படை, பொலிஸ் மற்றும் சுகாதாரத் துறையும் ஒன்றினைந்து சமூகப் பாதுகாப்பை வழங்குவதற்கும் சமூக உதவிகளை விரிவுபடுத்துவதற்கும் பல்வேறு தொற்றுநோய்களுக்கான பதிலளிப்பு உத்திகளை செயல்படுத்தி வருகின்றன.
கொரோனா வைரஸ் பரவலை தடுக்க சமூக இடைவெளியை கடுமையாக பின்பற்றுதல், தொற்றுக்குள்ளானவர்களை தனிமைப்படுத்துதல், தொற்றுக்குள்ளானவர்கள் அடையாளங்காணப்பட்ட கிராமங்களை முடக்குதல், பயண கட்டுப்பாடுகள் விதித்தல், வைத்தியசாலைகளில் உள்ளவர்களை முகாமை செய்தல், தற்காலிகமாக தங்க வைத்தல், தற்போதுள்ள பின்பற்றி வரும் உத்திகளை மீளாய்வு செய்தல் மற்றும் அவற்றிற்கேற்றவாறு செயற்படுதல் என்பனவே அதன் தீர்வுகள் சில ஆகும் என கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் தேசிய செயற்பாட்டு மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
மிகவும் பயனுள்ள தொற்று நீக்கல் திட்டங்கள், இராணுவத்தினரால் நிர்வகிக்கப்படும் தனிமைப்படுத்தல் மையங்கள், நோயாளிகளுக்கான ஆரம்ப கட்ட பராமரிப்பு, நோயாளிகளுக்கான வசதிகளை வழங்குதல் என்பன பாராட்டத்தக்க வகையில் அமைந்துள்ளன. சுகாதாரத் துறையுடன் இணைந்து செயற்படும் இராணுவத்தின் செயற்பாடானது நாட்டின் தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்தி நாட்டை மீள கட்டியெழுப்புவதற்கான சான்றினை பகர்கிறது.
இந்த முக்கியமான சூழ்நிலையில், கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்ட ஒருவருக்கு ஒவ்வொரு பிரஜையும் அவருடன் தனிப்பட்ட மற்றும் சமூக பொறுப்பை நிர்ணயிப்பதற்கான வழிமுறைகளைப் புரிந்து கொள்ளவும், இதன் மூலம் அவர்களுக்கான ஆதரவு, இரக்கம் மற்றும் பரிவு ஆகியவற்றை விரிவுபடுத்துவது இன்றியமையாத ஒன்றாகும்.