மினுவாங்கொடை கொத்தணியில் வைரஸ் தொற்றுக்குள்ளான 130 பேர் பூரண குணமடைவு

ஒக்டோபர் 28, 2020

தனிமைப்படுத்தல் நிலையங்களில் தனிமைப்படுத்தல் உட்படுத்தப்பட்ட மினுவாங்கொடை ஆடைத் தொழிற்சாலை கொத்தணியில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 130 பேர் குணமடைந்துள்ளதாக கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் தேசிய செயற்பாட்டு மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

முப்படையினரால் மேற்பார்வை செய்யப்படும் 75 தனிமைப்படுத்தல் நிலையங்களிலிருந்து இதுவரை 57,814 பேர் தமது தனிமைப்படுத்தல் காலத்தை நிறைவு செய்து வீடுகளுக்கு திரும்பியுள்ளதாகவும் மேலும் 8,090 பேர் தொடர்ந்தும் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் அந்த நிலையம் மேலும் தெரிவித்துள்ளது.

இதேவேளை, கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 4,043 பேர் சிகிச்சையின் பின் குணமடைந்துள்ளதாகவும் மேலும் 4,808 பேர் வைத்தியசாலையில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருவதாகவும் சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

இதுவரை இலங்கையில் 8,870 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் வைரஸ் தொற்று காரணமாக 19 பேர் உயிரிழந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.