வெலிகந்த பிரஜைகளுக்கு முகக் கவசத்துடன் விழிப்புணர்வு திட்டம்

ஒக்டோபர் 29, 2020

கொரோனா வைரஸ் பரவல் தொடர்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கையை முன்னெடுக்கும் வகையில் இராணுவத்தின் 231வது பிரிகேட் படைவீரர்களினால் வெலிகந்த பிரதேசத்தில் உள்ள சமூக தலைவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு முகக் கவசங்கள் வழங்கி வைத்தனர்.

இராணுவத்தினரால் முன்னெடுக்கப்படும் சமூக நலத் திட்டங்களில் ஒன்றாக முகக் கவசங்கள் விநியோகிக்கும் நடவடிக்கை 231வது பிரிகேட்டின் கட்டளைத் தளபதி கேர்ணல் பிரகீத் கமகேவின் பணிப்புரைக்கமைய முன்னெடுக்கப்பட்டது

இந்த திட்டத்துக்கு பொலிஸ், சமூக வளங்களை அணிதிரட்டுவதற்கான சங்கம், லயன்ஸ் கிளப் மற்றும் சிவில் திணைக்களங்கள் ஆகியன உதவிகளை வழங்கியது.

இந்தத் திட்டம் கிழக்கு பாதுகாப்புப்படை கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் சிந்தக கமகே, மற்றும் 23வது பிரிவின் போது கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் தம்மிக்க ஜெயசுந்தர ஆகியோரின் மேற்பார்வையின் கீழ் முன்னெடுக்கப்பட்ட மை குறிப்பிடத்தக்கது.