இராணுவ தலைமையகத்தில் இராணுவ அணிகலன் விற்பனைக் கூடம் பாதுகாப்புச் செயலாளரினால் திறந்து வைப்பு

ஒக்டோபர் 29, 2020

பத்தரமுல்லவில் அமைந்துள்ள இராணுவத் தலைமையகத்தில் இராணுவ அணி கலன்களை விற்பனை செய்யும் விற்பனைக் கூடத்தினை பாதுகாப்புச் செயலாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரத்ன மற்றும் பாதுகாப்பு அமைச்சின் சேவா வனிதா பிரிவின் தலைவி சித்ரானி குணரத்ன ஆகியோர் இணைந்து திறந்து வைத்தனர்.

புதிதாக திறந்து வைக்கப்பட்டுள்ள இராணுவ அணி கலன்களை விற்பனை செய்யும் விற்பனைக் கூடத்தின் செயற்பாடுகள் அனைத்தும் இலங்கை இராணுவத்தின் சேவா வனிதா பிரிவின் மேற்பார்வையின் கீழ் இடம்பெறவுள்ளது.

இந்த நிகழ்வில் பாதுகாப்பு படைகளின் பிரதம அதிகாரியும் இராணுவ தளபதியுமான லெப்டினன்ட் ஜெனரல் விவேந்திர சில்வா, இராணுவத்தின் சேவா வனிதா பிரிவின் தலைவி சுஜீவா நெல்சன், கடற்படை சேவா வனிதா பிரிவின் தலைவி சந்திமா உலுக்கேதென்ன, விமானப்படை சேவா வனிதா பிரிவின் தலைவி பிரபாவி டயஸ், பொலிஸ் சேவா வனிதா பிரிவின் தலைவி பிரியங்கி விக்ரமரத்ன, இராணுவ சேவா வனிதா பிரிவின் உறுப்பினர்கள் மற்றும் சிரேஷ்ட இராணுவ அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.