விமானப் படைத்தளபதி பாதுகாப்பு செயலருடன் பிரியாவிடை சந்திப்பு

ஒக்டோபர் 29, 2020

சேவை காலத்தைப் பூர்த்தி செய்து சேவையில் இருந்து வெளியேறிச் செல்ல உள்ள இலங்கை விமானப்படை தளபதி எயார் மார்ஷல் சுமங்கள டயஸ் பாதுகாப்புச் செயலாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) கமல்  குணரத்னவை  இன்று சந்தித்தார்.

அவர் 36 வருடங்கள் இலங்கை விமானப் படையில் சேவையாற்றிய பின்னர் சேவையிலிருந்து ஓய்வு பெறுகின்றார்.

எயார் மார்ஷல் சுமங்கள டயஸ், 2019ஆம் ஆண்டு மே மாதம் 29 ஆம் திகதி இலங்கை விமானப்படையின் 17வது தளபதியாக நியமிக்கப்பட்டார்.

பாதுகாப்புச் செயலாளர் மற்றும் பிரியாவிடை பெற்றுச் செல்லும் விமானப்படைத் தளபதி ஆகியோருக்கு இடையில் இடம்பெற்ற சினேக பூர்வமான கலந்துரையாடலில் பிரியாவிடை பெற்றுச் செல்லும் இலங்கை விமானப்படை தளபதியின் சேவைகள் குறித்து பாராட்டிய பாதுகாப்புச் செயலாளர், அவரின் எதிர்கால நிகழ்வுகள் சிறப்பாக அமைய தனது வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொண்டார்.

மேலும் இந்த நிகழ்வினை நினைவு கூறும் வகையில் பாதுகாப்புச் செயலாளர் மற்றும் விமானப்படை தளபதி ஆகியோருக்கிடையில் நினைவுச் சின்னங்களும் பரிமாறிக் கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.