சுமார் 4 மெட்ரிக் டொன் உலர் மஞ்சள் இலங்கை கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது

நவம்பர் 01, 2020

வடமேற்கு மற்றும் வடமத்திய கடற்படை கட்டளையாகத்தின் கடற்படை வீரர்களினால் கடந்த இரண்டு நாட்களாக  முன்னெடுக்கப்பட்ட பல்வேறு சோதனை நடவடிக்கைகளின் போது சுமார் 4,150 கிலோகிராம் உலர்ந்த மஞ்சள் கைப்பற்றப்பட்டது. சட்டவிரோதமாக மஞ்சள் கடத்தலில் ஈடுபட்ட 16 சந்தேக நபர்களும் இதன்போது கைது செய்யப்பட்டனர்.

கடத்தல்காரர்களின் சந்தேகத்துக்கிடமான நடமாட்டங்களை அவதானித்த  வடமேற்குகடற்படை கட்டளையகத்தினால் புத்தளம் ஏத்தாலை எரம்பு கொடெல்ல கரையோரங்களில் முன்னெடுக்கப்பட்ட ரோந்து நடவடிக்கையின் போது ஒரு தொகை உணர் மஞ்சள் கைப்பற்றப்பட்டது.

இந்த நடவடிக்கையின் போது 65 மூட்டைகளில் பொதியிடப்பட்டிருந்த 2,042 கிலோகிராம்  உலர்ந்த மஞ்சள், ஒரு இலகு ரக வாகனம் மற்றும் ஒரு மோட்டார் சைக்கிள் என்பவற்றை என்பன கைப்பற்றப்பட்டதுடன் ஐந்து சந்தேகநபர்களும் கைது செய்யப்பட்டனர்.

இது போன்ற மற்றுமொரு நடவடிக்கையின் போது  பெரியபாடு கரையோரத்தில் இரண்டு டிங்கி படகுகளில்  இருந்து டிரக் இயந்திரத்தில்  ஏற்றிக் கொண்டிருந்த சமயத்தில் சட்ட விரோதமாக கடத்தலுக்காக வைக்கப்பட்டிருந்த உலர்ந்த மஞ்சளினை கடற்படையினர் கைப்பற்றினார்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது பாதுகாப்பாக களஞ்சியப்படுத்தப்பட்டிருந்த மேலும் ஒரு தொகை உலர்ந்த மஞ்சள் கைப்பற்றப்பட்டது. இதற்கமைய 45 மூட்டைகளில் போது இடப்பட்டிருந்த 1,600 கிலோ கிராம் உலர்ந்த மஞ்சள், இரண்டு டிங்கி படகுகள், ஒரு கெப் வாகனம் என்பன கைப்பற்றப்பட்டதுடன் கடத்தலில் ஈடுபட்ட எட்டு சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டனர்.

அத்தோடு, வடமத்திய கடற்படை கட்டளையை கத்தினால் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கைகளின் போது கடலில் மிதந்த நிலையில் காணப்பட்ட 8 பொதிகளில் பொதியிடப்பட்டிருந்த 508 கிலோ கிராம் உலர்ந்த மஞ்சள். சந்தேக நபர்களின் சந்தேகத்துக்கிடமான நடமாட்டங்களை அவதானித்த இலங்கை கடற்படையினர் மூன்று சந்தேக நபர்களை இதன்போது கைது செய்தனர்.

குறித்த தேடுதல் நடவடிக்கைகள் தொற்று நோய் பரவல் தொடர்பாக விடுக்கப்பட்டுள்ள யாவும் சுகாதார அறிவுறுத்தலுக்கு அமைய முன்னெடுக்கப்பட்டதாக இலங்கை கடற்படை உறுதிப்படுத்தியுள்ளது.

கைதுசெய்யப்பட்டுள்ள சந்தேக நபர்கள் புத்தளம், ஏத்தாலை, கொந்தன் தீவு, மதுரங்குளி, பாலாவி மற்றும் மன்னார் பிரதேசங்களில் வசிக்கும் 20 தொடக்கம் 64 வயதுகளை  உடையவர்கள் என அடையாளங் காணப்பட்டுள்ளனர்.

தொற்று நீக்கம் செய்யப்பட்ட உலர்ந்த மஞ்சள் பொதிகள் மற்றும் சந்தேக நபர்கள் கட்டுநாயக்க சுங்கத் திணைக்கள அதிகாரிகள் மற்றும் மன்னார் பொலிஸாரிடம் மேலதிக நடவடிக்கைகளுக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.