முல்லைத்தீவில் உள்ள பொதுவிடங்கள் பல இராணுவத்தினரால் தொற்று நீக்கம்

நவம்பர் 01, 2020

கொரோனா வைரஸ் பரவல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதையடுத்து அதனை குறைக்கும் வகையில் முல்லைத்தீவு உடையார்கட்டு மற்றும் புதுக்குடியிருப்பு பிரதேசங்களில் உள்ள  பொது இடங்களில்  படையினரால் தொற்று நீக்கம் செய்யும் பணிகள் முன்னெடுக்கப்பட்டது.

குறித்த பிரதேசங்களில் தொற்று நீக்கம் செய்யும் பணிகள் முல்லைத்தீவு பாதுகாப்பு படைகளின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் ஜெகத் ரத்நாயக்க மற்றும் 68 ஆவது படைப்பிரிவின் பொது கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் உபாலி ராஜபக்ஷ ஆகியோரின் பணிப்புரைக்கமைய 68 ஆவது படைப்பிரிவின் படை வீரர்களினால்  முன்னெடுக்கப்பட்டது.

படையினரால் மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கைக்கு குறித்த பிரதேசங்களுக்கு பொறுப்பான பொது சுகாதார பரிசோதகர்கள் தமது பூரண ஒத்துழைப்பை வழங்கியமை குறிப்பிடத்தக்கது.