கிளிநொச்சி தீவிர சிகிச்சை வைத்தியசாலையின் நிர்மாணப் பணிகளை பாதுகாப்பு படைகளின் பிரதம அதிகாரி கண்காணிப்பு

நவம்பர் 01, 2020

கிளிநொச்சி கிருஷ்ணபுரம் பகுதியில் நிர்மாணிக்கப்பட்டு வரும் தீவிர சிகிச்சை வைத்தியசாலையின் நிர்மாணப் பணிகளை கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் தேசிய செயற்பாட்டு மத்திய நிலையத்தின் தலைவரும் பாதுகாப்பு படைகளின் பிரதம அதிகாரியும் இராணுவத் தளபதியுமான லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா பார்வையிட்டார்.

குறித்த இந்த வைத்தியசாலை கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் கிளிநொச்சி வைத்திய அதிகாரியின் ஒத்துழைப்புடன் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

இராணுவத் தளபதியின் இந்த விஜயத்தின்போது வன்னி பாதுகாப்பு படையை கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் சம்பத் கொடுவேகொட மற்றும் சிரேஷ்ட இராணுவ அதிகாரிகளுடன் கலந்துரையாடல் ஒன்றும் இடம்பெற்றது.

மேலும் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா நிர்மாணப் பணிகளில் ஈடுபட்டுவரும் சிரேஷ்ட ராணுவ அதிகாரிகள் மற்றும் கட்டிட நிர்மான குழுவுடன் இணைந்து நிர்மாணப் பணிகள் இடம்பெறும் தளத்தையும் பார்வையிட்ட மை குறிப்பிடத்தக்கது.