மேலும் மினுவாங்கொடை கொத்தணியில் வைரஸினால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 7, 582 ஆக பதிவாகிள்ளதாக கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் தேசிய செயற்பாட்டு மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

நவம்பர் 02, 2020

மேலும், கட்டார் விமான சேவைக்குச் சொந்தமான QR 668 விமானத்தின் மூலம் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்த மூன்று இலங்கை பிரஜைகள் தனிமைப்படுத்தல் செயற்பாடுகளுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக இம் மத்திய நிலையம் மேலும் தெரிவித்துள்ளது.

இதேவேளை தனிமைப்படுத்தல் செயற்பாடுகளை பூர்த்தி செய்த மேலும் 228 பேர்  தனிமைப்படுத்தல் மையங்களில் இருந்து வீடுகளுக்கு திரும்ப காத்திருக்கின்றனர்.

அத்தோடு மஹர பிரதேசத்தில் வசிக்கும் 40 வயதுடைய ஆண் ஒருவர் நேற்றைய தினம் மரணம் அடைந்ததையடுத்து கொரோனா வைரஸ் தொற்று காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 21 ஆக அதிகரித்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் உறுதிப்படுத்தியுள்ளது.

உயிரிழந்த நபர் சுவாச நோய்கள் மற்றும்  உயர் குருதி அழுத்தம் காரணமாக வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த ஒருவர் எனவும்  அவர் சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த வேளையில் உயிரிழந்துள்ளார்.

பின்பு மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனையின் பின்னர் அவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டுபிடிக்கப் பட்டதையடுத்து கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 21 அதிகரித்ததாக  குறிப்பிடப்பட்டுள்ளது.